தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற குடும்பஸ்தர் ஒருவரை சாவகச்சேரிப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் சிறுமி மீதான இவ்வல்லுறவு முயற்சி சம்பவம் கெருடாவில் சாவகச்சேரி பகுதியில் கடந்த 16ம் திகதி முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தாய் வேலைக்கு சென்ற சமயம் வீட்டில் சிறுமி தனித்திருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுதாகரித்துக்கொண்ட சிறுமி அந்நபரை தள்ளவிட்டு வெளியே ஒடி சென்றபோது பொது மக்கள் அங்கு கூடி அந்நபரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆயினும் அவர் தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த சாவகச்சேரிப் பொலிஸாரே இந்நபரை தேடிவந்த நிலையில் சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்துள்ளனர்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென்பதுடன் திருமாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment