கடந்த மாதம் 20 ஆம் திகதி இரவு கோட்டே ரஜமாக விஹாரையின் தேரர்களான பிட்டிகல ஜினசிறி மற்றும் பொரலஸ்கமுவ குணரதன ஆகியோரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் சாட்சியாளர்களால் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது இனங்காணப்பட்டுள்ளனர்.
நுகேகொடை பதில் நீதவான் திஸ்ஸ விஜேரத்னவின் கண்காணிப்புடன் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது ஐந்து சாட்சியாளர்களால் இச்சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மே மாதம் நான்காம் திகதி வரை சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினமும் சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகியிருக்கவில்லை.
No comments:
Post a Comment