நிமேஷாதுவ என்ற படகில் கடற்றொழி லுக்காக சென்றிருந்தபோது சோமாலிய கடற்கொள்ளையர்களினால் ஆறு மாதங் களுக்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களை ஸ்பெய்னின் போர்க் கப்பலொன்று மீட்டுள்ளது.
டென்சானியாவுக்கு சுமார் 50 கடல் மைல் தூரத்தில் உள்ள கடல் பரப்பில் வைத்து ஸ்பெய்ன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீனவர்களை தடுத்து வைக்கப்பட்டிருந்த படகில் ஏழு கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும், இலங்கை மீனவர்களின் படகை பயன்படுத்தி சோமாலிய கடற்கொள்ளை யர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், ஸ்பெய்ன் கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment