டுபாயில் ஹோட்டலில் வேலை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த நபருக்கு பிணை
டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு தயாரிக்கும் வேலை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து பெண்ணொருவரை ஏமாற்றி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பெண்னொருவர் வழக்கின் முறைப்பாட்டாளருக்கு மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுப்பதாக மன்றில் ஒத்துக்கொண்டதை அடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரான சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராவார்.
இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் தும்மல் சூரிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment