Saturday, April 14, 2012

கணவனுடன் சேர்ந்து தனது தாயை தாக்கி வீட்டை விட்டு துரத்தியவருக்கு விளக்க மறியல்.

தனது தாயை வீட்டிலிருந்து வெளி யேறுமாறு வற்புறுத்தி தாக்குதல் நடத்தி, உளியினால் குத்தி காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள மகளையும் அவரது கணவரையும் (மருமகன்) விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு அக்கர பணஹ (50ஏக்கர்) பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவர்களாவர். தாக்குதலுக்கு இலக்கானவர் தனது கணவர் மரணமடைந்த பின்னர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார். சந்தேக நபர்களான மகள், அவரது கணவர், (மருமகள் )உட்பட அனைவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

வீட்டில் இடவசதி இன்மையினால் தனது தாயாரையும் , சித்தப்பாவையும் வீட்டிலிருந்து வெளியேறுமாறு சந்தேக நபரான மகள் அடிக்கடி கூறிவந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாத்த்தின்போது சந்தேக நபரான மருமகன் (மனைவிக்கு தெரிய )மாமியார் மீது உளி ஒன்றினால் குத்தியுள்ளார். இதன் காரணமாக காயமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களில் ஒருவரான மகள் நீதிமன்றில் பிரதிவாதியாக ஆஜர்செய்யப்பட்ட போது அவர் கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு அவர் சார்பில ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோரிய போது, பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment