யாழில் 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது குறித்த இளைஞன் பாடசாலைச் சிறுமிக்கு குளிர்பானம்.அருந்தக் கொடுத்ததாகவும் குளிர்பானத்தை அருந்திய பின் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாலடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தினர் இவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment