மன்னம்பிட்டி பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு.
புலிகளால் மனம்பிட்டி பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள், பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. 40 மில்லி மீட்டர் ரக 6 ரவைகள், இரு மெகசின், ரீ 56 ரக 69 ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகையாக வெடிபொருட்கள், மனம்பிட்டி பிரதேசத்தில் மரமொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலநறுவை பொலிஸார் கண்டெடுத்தனர். ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்தே, இவை கண்டெடுக்கப்பட்டன. இவை, எல்ரிரிஈ பயங்கரவாதிகளுக்குரிய ஆயுதங்களாக இருக்கலாமென, நம்பப்படுகிறது.
0 comments :
Post a Comment