வவுனியா கிணறொன்றிலிருந்து யாழ்.பல்கலைகழக மாணவியின் சடலம் மீட்பு.
வவுனியா - வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து, மாணவி யொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ள னர். யாழ். பல்கலை கழகத்தில் 3ம் வருடத்தில் கல்வி பயிலும் மரியதாஸ் மரியஜெனற் பௌசியா (25 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி வவுனியாவிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வேளை, நேற்று மாலை தொடக்கம் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து இவரை தேடிய உறவினர்கள் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து இன்று காலை 10 மணியளவில் இவரை சடலமாக மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment