நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் பால் விற்பனை நிலையம் திறந்து வைப்பு (படங்கள்)
10 இலட்சம் ரூபா செலவில் நீர்கொழும்பு மாநகர சபை இடது பக்க வாயிற் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பால் விற்பனை நிலையம் இன்று காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இதனை மேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சக்தி , எரிபொருள் விடமைப்பு மற்றும் நிர்மாணம், மீன் பிடி, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நிமல் லான்ஸா திறந்து வைத்தார்.
மேல்மாகாண கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இரண்டு கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக நீர்கொழும்பில் பால் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பால் மற்றும் பால் உற்பத்தி உணவுப் பொருட்களை சுய தொழிலாக மேற்கொண்டுள்ள நால்வருக்கு இந்நிகழ்வில் அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாநகர சபை உறுப்பினர் தயான்லான்ஸா, மாநகர சபையின் நிருவாக உத்தியோகத்தர்கள் , மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment