பள்ளிவாயலுக்கு பொருத்தமான காணியை பெற்றுக்கொடுக்க பாதுகாப்புச் செயலர் உத்தரவு.
தம்புள்ள பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் ஒன்றினை அகற்றக்கோரி இன்று அங்கு பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன் குறிப்பிட்ட பள்ளிவாயலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பள்ளிவாலுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஆர்ப்பாட்டக்காரர்களால் இருகாரணங்கள் முன்வைக்கப்படுகின்றது. முதலாவது காரணமாக குறிப்பிட்ட பள்ளிவாயல் அமைக்கப்பட்டுள்ள காணி பன்சலை ஒன்றுக்கு சொந்தமானது எனவும்: இரண்டாவதாக குறிப்பிட்ட பள்ளிவாயல் அமைந்துள்ள பிரதேசம் புனிதபூமி என பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு பிற வணக்கஸ்தலங்கள் அமைய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தம்புள்ளையில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலையை அறிந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் சீல் வைக்கப்பட்டுள்ள பள்ளிவாயலுக்கான பொருத்தமான காணி ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பாதுபாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதேநேரம் இது விடயம் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் உயர்மட்ட சந்திப்புக்களுக்கான வாய்ப்புக்கள் உண்டெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment