Saturday, April 7, 2012

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்க எந்த தரப்பும் முன்வரவில்லை - சுதர்ஷனி

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கு எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை நினைவுக்கூறும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அப்பாவி பொதுமக்களின் மனித உரிமைகளை மீறிய பயங்கரவாதிகள் குறித்து மாத்திரமே தற்போது சர்வதேசம் பேசி வருவதாகவும் அது குறித்து கவலையடைவதாகவும் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே அங்கு மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் யுத்தம் ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

புலி பயங்கரவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை நியாயப்படுத்த சில சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் புலிகள் அமைப்பு செய்த குற்றச் செயல்களை மறக்க முடியாது எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Pullai- Still there is no investigation for the death of whole vanni people. All the tigers except karuna are dead now-are you mad.

    ReplyDelete