சோமாலிய கடற் கொள்ளையர்களினால் பிடிக்கப்பட்டு கடந்த வாரம் ஸ்பைன் கடற்படை வீரர்களால் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அறுவரும் தன்சானியாவின் தாருஸ்ஸலாம் நகர விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு இன்று காலைஇலங்கையை வந்தடைந்தனர்.
இவர்களை வரவேற்க அவர்களது குடும்ப உறவினர்கள் நண்பர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திருந்தனர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களான எஸ்.கே.கே. வீரசிறி, பெருமாள் செல்வராஜன், வர்ணகுலசூரிய சாந்த செபஸ்தியான், தினேஷ் சுசந்த பெர்னாந்து, ஜூட் நிசாந்த பெர்னாந்து , வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரிகோ ஆகியோரே இன்று காலை 9.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மீனவர்கள் அறுவரும் விமான நிலையத்தை வெளியேறும் பகுதியால் வந்த போது உறவினர்கள் அழுதபடி ஓடிச் சென்று அவர்களை கட்டித்தழுவினர்.
பின்னர் மீனவர்கள் அறுவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
தாhங்கள் ஆறு மாத காலமாக கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், ஒரு வேளையே ரொட்டி ஒன்று உணவாக வழங்கப்பட்டதாகவும் குடிப்பதற்கு சிறிது தண்ணீரே வழங்;கபட்டதாகவும், முகம் கழுவுவதற்கோ குளிப்பதற்கோ வசதிகள் இருக்கவில்லை எனவும் ,பல சமயங்களில் துப்பாக்கி முனையில் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இலங்கை அரசாங்கம் தங்களை விடுவிப்பதற்கு ஆக்கப்பூர்வமான முறையில் பங்களிப்பு செய்யவில்லை என்பது அவர்களது பொதுவான குற்றச்சாட்டாக இருந்தது.
பின்னர் நீர்கொழும்பு, மங்குளிய தேவாலயத்தில் இடம் பெற்ற பிரார்த்தனை நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் அறுவரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மீன்பிடித் துறை அமைச்சு ஆறு இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் , இலங்கை அதிகாரிகள் இருவரை தன்ஸானியாவுக்கு அனுப்பி மீனவர்களை அழைத்து வருவதற்காகவும் Nஹhட்டலில் தங்கும் செலவுகளுக்காகவும இரண்ட்டு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டடுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீனவர்கள் அறுவரும் 'நிமேஸாதுவ' என்ற பெயர் கொண்ட ரோலர் படகில் மீன்பிடிக்க சென்றபோதே கடத்தப்பட்டு 68 கோடி ரூபா (6 மில்லியன்டொலர்) கப்பம் கோரப்பட்டிருந்தனர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நிமேஸா துவ என்ற டோலர் படகில் மீன்பிடிப்பதற்காக குறித்த மீனவர்கள் அறுவரும் சென்ற போது சர்வதேச கடற்பகுதியில் வைத்து படகில் எரிபொருள் தீர்ந்து போயுள்ள நிலையில் படகு தத்தளித்துக் கொண்டிருக்கையில் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் செப்டம்பர் 29 ஆம் திகதி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிப்பதற்கு கடற்கொள்ளையர்கள் 68 கோடி ரூபா கப்பமாக கேட்டிருந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி ஸ்பைன் கடற்கடை வீரர்களும் தன்சானியா அதிகாரிகளும் ஒண்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறு மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment