Wednesday, April 25, 2012

தம்புல்லை பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- அமைச்சர் ஜனக பண்டார

தம்புல்லை - ரன்கிரி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளியை அகற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம் பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கக்கூடியதாக இருந்த போதும், தற்போது அது பெரிதாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த பள்ளிவாசலை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிவாசல் புனித பூமி பிரதேசத்திற்கு வெளியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதமரின் நடவடிக்கைகள் இந்த விடயத்தில் உரிய விதத்தில் அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment