குமார் – திமுது கடத்தல் ஓர் நகைச்சுவை சம்பவம் என்கிறார் பசில்
பிரேம்குமார் குணரட்னம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை ஒர் நகைச்சுவை சம்பவமாகும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த சம்பவம் மூலம் பாரியளவிலான பிரச்சாரம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. கடத்தப்பட்டதாக இருவரும் வாக்கு மூலங்கள் எதனையும் அளிக்கவில்லை.
குணரட்னம் கடத்தல் சம்பவத்தின் மூலம் பாரியளவிலான பிரச்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தின் மூலம் பல மில்லியன் ரூபா செலவிட்டு மேற்கொள்ள முடியாத பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
குணரட்னம் வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ளார். தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியமையானால் ஒர் தலைவலி குறைந்தது.
0 comments :
Post a Comment