Monday, April 16, 2012

வெள்ளை வானில் வந்தவர்களால் நீர்கொழும்பில் கடத்தப்பட்ட சிறுவன் கொழும்பில் விடுவிப்பு

நீர்கொழும்பு கடற்கரை தெருவில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் ஒருவன் , இரண்டு தினங்களின் பின்னர் கொழும்பில் வைத்து விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (12 நண்பகல் வேளையில் கடற்கரை தெருவில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட சிறுவன், பின்னர் சனிக்கிழமை (14)கொழும்பு பஸ் நிலையம் ஒன்றி;ல் வைத்து விடுவிக்கப்பட்ட நிலையில் பஸ்ஸில் பயணித்து வீடு வந்து சேர்ந்துள்ளான்.

இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நீர்கொழும்பு அலஸ் வீதியை சேர்ந்த வர்ண குலசூரிய திலந்த நிமேஷ்(12வயது) என்ற சிறுவனே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளவராவார்.

இச்சிறுவன் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்பவராவார்.

கடந்த வியாழக்கிழமை பிற்பபகல் 12.30 மணியளவில் கடற்கரை தெருவில் உள்ள ஐஸ் கிரீம் விற்பனை நிலையம் ஒன்றிற்கு ஐஸ்கிறீம் வாங்க நடையாக சென்ற போது கடத்தப்பட்ட சிறுவன் இரண்டு தினங்களின் பின்னர் 14 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.

நீர்கொழும்பு நோக்கி செல்லும் 240 ஆம் இலக்க அரசாங்க போக்குவரத்து பஸ் டிக்கட் ஒன்றையும் 500 ரூபா பணத்தையும் கொடுத்து கடத்தல்காரர்கள் சிறுவனை விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் வர்ணகுலசூரிய மேரி மொனிக்கா ஜெயராணி (42 வயது) தெரிவிக்கையில், தவறுதலாக எனது மகன் கடத்தப்பட்டீருக்கலாம் அல்லது எங்களிடம் பணம் இருப்பதாக நினைத்து கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டிருக்கலாம்.

ஆயினும் எனது மகன் வீடு வந்து சேர்ந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் . இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com