நிச்சயமாக தான் மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அண்மையில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரேம்குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளிவரும் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது விருப்பத்திற்காகவோ அல்லது விருப்பமின்மைக்காகவோ அல்லாமல், அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்காகவே தான் இலங்கை வர இருப்பதாகவும், மீண்டும் இலங்கை மக்களை நேரில் சந்திப்பது தனது நோக்கத்தின் பட்டியலில் முதலில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment