கொரிய மொழிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக தமக்கு கண்டறிவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மிக நெருங்கிய சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
டப்ள்யு.டப்ள்யு.டப்ள்யு.ஈபீஎஸ்.ஜிஓ.கேஆர் எனும் இணையத்தளம் ஊடாக கொரிய தொழில் வாய்ப்பை எதிர்பார்ப்போர் இணையத்தளத்தில் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.
குறித்த விண்ணப்பதாரி தனது தொழில் தொடர்பான ஒப்பந்தத்தை கொரிய மனித வள நிறுவனத்தினால் தமக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை இதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
குறித்த கணக்கை ஆரம்பித்ததன் பின்னர் இரகசிய இலக்கத்தை பதிவதன் மூலம் வீட்டில் இருந்தவாறு குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். மிக நேர்மையான விதத்தில் இடை தரகர்கள் மோசடிகார்களிடம் சிக்காமல் தனது தொழில் ஒப்பந்தம் தொடர்பான புதிய தகவல்களை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.
அத்துடன் கொரியாவில் வேலைவாய்ப்பை எதிர்ப்பார்ப்போர் தமது தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் ஏனையவர்களுக்கு வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறு ஏனையவர்களின் தகவல்கள் ஊடாக கணக்குகளை ஆரம்பித்தால் குறித்த தகவல்கள் அடங்கியவருக்கு கணக்கு முடியாமல் போகலாம். கொரிய தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு வேறு தரப்பினர்களின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டாமென்றும் புதிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment