சண்டையை விலக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது சரமாரியான தாக்குதல்
ஏட்டியாவல பகுதியில் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுவென்றை விலக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது சரமாரியான தாக்குதல் இடம்பெற்று ள்ளது. இது தொடர்பாக தெரியவரு வதாவது,
குழுவென்று மதுபோதையில் சண்டையில் ஈடுபடுவதாகவும், இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சண்டையில் ஈடுபட்ட குழுவில் இருந்த ஒருவர் கையில் வைத்திருந்த போத்தலால் பொலிஸ் கான்ஸ்டபிளின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தோடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.
0 comments :
Post a Comment