தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் - பிரார்த்தனை: அமைதி ஊர்வலம்: கண்டனப் பேரணி (படங்கள்)
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதை கண்டித்து அகில அலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் பிராத்தனை நடாத்துமாறு வேண்டிக் கொண்டதற்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை அனேகமான ஜும்ஆ பள்ளிவாசல்களில் துஆப் பிரார்த்தனைகளும் அமைதி ஊர்வலமும் இடம்பெற்றன.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இன்றைய குத்பா பிரசங்கங்களும் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதையும் இடமாற்றக்கோருவதையும் கருவாகாக் கொண்டே உரையாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், வடக்கு மாகாணத்தில் யாழ்பாணம் , மன்னார் பிரதேசங்கலும் அமைதியான ஆர்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளது. புத்தளத்தில் பாரிய அமைதியான ஆர்பாட்ட பேரணி துவா பிராத்தனை மற்றும் கண்டன உரை என்பனவும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் கண்டனப் பேரணி ஒன்றும் இடம்பெற்றது.
விசேட துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில் அரசியல் பிரமுகர்களான மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க உட்பட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இதேவேளை, இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ இடம்பெற்றது அதில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர்.அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டிகொண்டமைக்கு அமைவாக துவா பிராத்தனையும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment