Monday, April 2, 2012

அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சிலர் கொட்டாஞ்சேனையில் கைது

சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து தப்பி அவுஸ்திரேலியாவிற்கு செல்வ முயன்ற சிலர் கொட்டாஞ் சேனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிததுள்ளார்.2012 மார்ச் மாதம் 31 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து, சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல தயார் நிலையில் இருந்த 6 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, திருகோணமலை, கொட்டாஞ்சேனை, சாவகச்சேரி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனா.இவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப அழைத்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பணம் திரட்டுபவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்குமாறு இவர்களின் சூழ்ச்சிகளில் சிக்க வேண்டாமென்றும் பொலிஸா பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment