போதைப் பொருள் வந்த சம்பவத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார் நடிகை அஞ்சலா
கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு போதைப் பொருள் வந்திருந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என நடிகை அஞ்சலா செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் திகதி கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு பெண் ஒருவரின் பெயரிட்டு வந்திருந்த மூன்று பொதிகளில் ஒன்றை பரிசோதித்தபோது அதில் வெளிநாட்டு சஞ்சிகை இருந்ததாகவும் அதனுள் ஹசீஸ் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
நடிகை அஞ்சலா செனவிரத்னவின் பெயருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த இந்த கடிதத்தை பெற்றுக் கொள்ள கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வெள்ளைக்கார வெளிநாட்டவர் ஒருவர் சென்ற வேளை , அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப் பொருள் பொதிகள் வந்த சம்பவத்துடன் தனது பெயரையும் இணைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாக நடிகை அஞ்சலா செனவிரத்ன குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தான் ஒரு நிரபராதி எனவும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மத்திய நிலையத்தை நாளைய தினம் தொடர்பு கொள்ள இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக நடிகை அஞ்சலா செனவிரத்னவிடம் வாக்கு மூலம் பெறப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்டக் குழுவினர் உள்ளனரா என ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment