உள்நாட்டு பிரச்சினையை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்ல முற்போக்கு சோசலிச கட்சி திட்டம்
உள்நாட்டு பிரச்சினையை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, முற்போக்கு சோசலிச கட்சி சூழ்சிகரமாக செயற்பட்டு வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொருளாலரும், அமைச்சருமான டலஸ் அலகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் அந்த கட்சியின் உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் காணாமல் போனமை, இந்த அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடு செல்ல வேண்டுமாக இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளிநாட்டு தூதுவருடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைய முடியும் என்ற நிலை இருக்கிறது.
இதனை காணாமல் போன பாதள உலக குழுவினரும் மேற்கொள்ள கூடிய நிலை உருவாகி இருக்கிறது. இதனையே குமார் குணரட்னம் என்பவரும் மேற்கொண்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment