ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன கடந்த 11 ம் திகதி லண்டன் கேட்விச் விமானநிலைத்தில் இறங்கியபோது மயங்கிய விழுந்ததை தொடர்ந்து அவர் கிழக்கு சறேய் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட அவருக்கு இருதய வைப்பாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான செலவாக 24500 (RS 5,241,514.00) பிரித்தானிய பவுண்டுகள் வேண்டுமென வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்படி கட்டணத்தைச் செலுத்துவதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடாக ஜனாதிபதி நிதியத்திடம் நிதிகோரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனவிற்கு நிதியினை வழங்குவதற்கு நாட்டு மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன் : அவர் அந்நிதியினை புலி ஆதரவாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
No comments:
Post a Comment