Tuesday, April 17, 2012

அர்த்தமற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்காமல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக-சங்கரி

சுயநிர்ணய உரிமை, தேசியத்துவம் என்ற அர்த்தமில்லாத வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்காமல், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர் களும், ஏனைய தமிழ் கட்சிகளும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடபடுவதன் மூலமே சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும், என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழ்க்கட்சிகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து, தமிழ் மக்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்காக, அரசாங்கத்துடன் பேச்சுவார்ததை நடாத்துவதுதன் மூலமே 30 ஆண்டுகால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை, தமிழ் தலைவர்கள் யதார்த்தபூர்வமாக சிந்தித்தால், அவற்றை குறைந்த மட்டத்திலாவது அமுலாக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும், வீ. ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment