Friday, April 20, 2012

இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருந்துபசாரம்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ்க்கு இன்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருந்துபசாரமளித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த விருந்துபசார நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நேற்றைய தினம் இந்திய குழு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசியது.

இந்திய நாடாளுமன்றக் குழுவை சந்தித்து பேசுவதற்கு முன்னர், ரணில் விக்ரமசிங்க பாரஜீய ஜனதா கட்சியின் தலைவர் சுஸ்மா சுவராஜுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இதன் போது, இலங்கையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ரணில் சுட்டிக்காட்டியுள்ளர்.

இதற்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்த அனைத்து கட்சிகளுனதும் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

அத்துடன் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுவில் எதிர்கட்சிகளும் இணையும் வகையிலான சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் பரிமாற்றிக் கொள்ள முடியும். அரசியல் தீர்வினை காண்பதற்கு நீண்டகாலம் இல்லை எனவும், உடனடியாக இதற்கு செயற்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் கலந்துரையாடினர்.

இன்று காலை ஹட்டன் நகருக்கான விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இந்திய நாடாளுமன்ற குழுவினருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment