மட்டக்களப்பு மாவட்டத்தில், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு, பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின பணிப்புரைக்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு.ஆர்.வி. செனவிரட்னவின் ஆலோசனைக்கமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு மாவட்ட சிறுவர் மகளிர் பிரிவு, தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதுடன் பொது மக்களிடமிருந்து தகவல்களைபெற்று, துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாடசாலை மாணவர்களை அறிவுறுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள சிறுவர், மகளிர் பிரிவூடாக, மாவட்ட பாடசாலைகளில் சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் நல சட்டவாக்கங்கள் பற்றி, விசேட அறிவூட்டல்கள் இடம்பெறுகின்றன.
இதற்கமைய, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில், சிறுவர் நலன் அறிவூட்டல் நிகழ்வொன்று, மட்டக்களப்பு பிள்ளையாரடி, நல்லையா வித்தியாலயத்தில் இடம்பெற்றதுடன் தலைமையக பொலிஸ் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி திருமதி கிருபைராணி யோகராசா உட்பட பொலிஸ் அதிகாரிகளினால், சட்டவாக்கம் பற்றி, அறிவூட்டப்பட்டன.
வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்றுள்ள பெற்றோரின் பிள்ளைகள், முச்சக்கர வண்டிகளில் சென்ற பாடசாலை மாணவர்கள், அனாதை இல்லங்களில் உள்ள சிறார்கள், துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாக, பொலிஸ் சிறுவர் பிரிவு, இனங்கண்டுள்ளது.
0 comments :
Post a Comment