கடனட்டை மோசடி தொடர்பில் அதிக எண்ணிக்கையானவை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மூலமாகவே இடம்பெறுவதாகவும், அந்த ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப வருவோரின் கடனட்டைகளை விசேட இயந்திரத்தில் ஸ்கேன் செய்யும்போது மோசடி இடம்பெறுவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குழுக்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தி எரிபொருள் நிலைய ஊழியர்கள் மூலமாக கடனட்டைகளில் உள்ள தகவல்கள் இரகசியமாக பெற்றுக்கொள்ளப்பட்டு போலி கடனட்டைகள் தயாரிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் கடனட்டைகளை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது .
No comments:
Post a Comment