வடகொரியா விண்ணுக்கு ஏவிய விண்கலம் பல துண்டுகளாக வெடித்துச் சிதறியுள்ளது.
வடகொரிய முன்னாள் தலைவர் கிம் இல் சங்கின் 100 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு உன்ஹா 3 எனும் ரொக்கட்டை விண்ணுக்கு ஏவவுள்ளதாக தெரிவித்து வந்ந வடகொரியா சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பிற்கும் மத்தியில் வியாழக்கிழமை இரவு குறித்த ரொக்கட்டை விண்ணுக்கு ஏவியது. எனினும் ஏவப்பட்ட விண்கலம் பல துண்டுகளாக வெடித்துச் சிதறியுள்ளது.
வியாழன் இரவு வட கொரியாவின் சோல்சான் டோங்சாங் ரி என்ற இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் கடல் மட்டத்திலிருந்து 70.5 கி.மீ உயரத்துக்குச் சென்றபோது பல துண்டுகளாக வெடித்துக் சிதறி கடலில் விழுந்ததுள்ளது.
வெடித்துச் சிதறிய விண்கலத்தின் துண்டுகளைச் சேகரிக்கும் பணியில் 12 இற்கும் மேற்பட்ட வடகொரியக் கடற்படைக் கப்பல்கள் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின. எனினும் விண்கலம் வெடித்து சிதறியதை வெளியிடாமலிருந்த வடகொரியா பல மணி நேரங்களுக்கு பிறகு, தன்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அது தொடர்பில் அறிவியல் அறிஞர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் ஆராய்ந்து வருவதாகவும் அறிவித்தது.
இதுபற்றி கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் ஜே கார்னி, 'வட கொரியாவின் முயற்சி தோல்வியில் முடிந்திருந்தாலும் அதன் செயல் கண்டனத்து க்குரியதுடன். சர்வதேசச் சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையும் நிராகரிக்கும் வகையில் வட கொரியா நடந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்தையே, பிரித்தானியா, ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment