சிவில் உடையில் பெலிஸார் நிறுத்தப்படுவர்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டுக் காலத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பேருந்துகள் மற்றும் ரயில்கள், சன நெரிசல் மிக்க இடங்களில் பெலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏதேனும் அசம்பாவிதம் இடம்பெறும் பட்சத்தில் உடனடியாக பெலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதும்ககளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment