கழுத்தை நெரித்து கொலை செய்த மீன் வியாபாரிக்கு பிணை
24 வயதுடைய இளைஞர் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆறு மாதங்களுக்கு மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மீன் வியாபாரி ஒருவரை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 20 அயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் தலா நான்கு இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
ஜா- எல பிரதேசத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.
இச்சம்பவம் ஜா-எல மீன் விற்பனை நிலையமொன்றில் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment