Sunday, April 8, 2012

இந்தியாவின் சதிவலையில் தமிழ் மக்கள் மீண்டும் சிக்குவார்களா?

முற்றிலும் வன்செயல்களை காட்சிப்படுத்தி புலம்பெயர் தேசத்திலே பணம் சம்பாதித்துவந்த புலிகளுக்கு இலங்கையில் வெடியோசை சத்தங்கள் ஓய்ந்தமை வருவாயில் வீழ்சியை ஏற்படுத்தியது. ஏன் இல்லை என்றே சொல்லாம்.

இந்நிலையில் அண்மையில் திருமலையில் இடம்பெற்ற கொலையும் அதன் பின்னரான ஊடக பிதட்டல்களும் புலம்பெயர் புலிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

குறிப்பிட்ட கொலையின் பின்னணியில் புலிகள் உள்ளதாகவும் இதற்கான உத்தரவுகள், ஏற்பாடுகள் இந்தியாவிலிருந்தே இடம்பெற்றதாகவும், இலங்கைப் பத்திரிகைககளில் வெளியாகியிருந்த செய்தியை மிகைப்படுத்தி புலிகள் இந்தியாவில் தளம் அமைத்துள்ளதாகவும், அவர்கள் இலங்கையிலே தமது செயற்பாடுகளை விஸ்தரிக்க முயற்சிப்பதாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அம்(புலி) மாமாக் கதை சொல்லப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

வன்னியிலிருந்து இரத்தம் தோய்ந்த வண்ணப்படங்களும், கொலை வெறியைத் தூண்டும் வீடியோக் காட்சிகளும் காண்பித்து பணம் சம்பாதித்துவந்த புலிகள் தற்போது அவை இல்லாத கட்டத்தில் புதிய நடைமுறை ஒன்றை கடைப்பிடித்து வருகின்றனர். அந்நடைமுறை யாதெனில், ஆங்கில சிங்கள ஊடகங்களுக்கு பணத்தினை அள்ளி வழங்கி, புலிகள் இலங்கையில் செயற்படுவதாக, அன்றில் ஐரோப்பாவிலே புலிகள் இலங்கை அரசிற்கு தலையிடி கொடுத்து விட்டதாக செய்தி வெளியிடுவது. அச்செய்தியில் புலனாய்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன என திட்டமிட்டபடி அநாமதேயமாக கூறப்படும். பின்னர் அச்செய்தியை தமது பிரச்சார ஊடகங்களில் கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன எனத் தெரிவிப்பர்.

இவ்வாறு தெரிவிப்பதற்கான காரணம் புலிகள் சொல்லும் கதையை மக்கள் நம்புவதற்கு தயாரக இல்லை என்பதை புலிகள் உணர்ந்து கொண்டுள்ளனர். இவ்வாறே அண்மைய கொலைச் செய்தியும் பரப்பப்பட்டுள்ளது. முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் பெண்ணொருவருடன் வைத்திருந்த தகாக உறவின் பின்னணியில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர் புலிகள் இலங்கையில் ஒரு பட்பாசினை தன்னும் கொழுத்தி அங்கே ஒரு போஸ்டரை ஒட்டிவிட்டால்போதும், காலத்தை சில வருடங்களுக்கு ஓட்டலாம் எனக் கருதுகின்றனர். ஏன் இந்த தேவை ஆசியாவிலே அமெரிக்காவின் அடிவருடியான இந்தியாவிற்கும் அவசியமாக உள்ளது?. இதன்பொருட்டு திரைமறைவில் சூட்சிகள் பின்னப்படுகின்றது என்பது உண்மை. அதாவது இலங்கையில் அசமந்த நிலை ஒன்றை உருவாக்கிவிட்டால், இலங்கை இந்தியாவை நாடவேண்டிவரும் என்பது இந்தியாவின் கணிப்பு. அதற்காக கடந்த காலம்போல் மீண்டும் ஒருமுறை தமிழர் தரப்பை பகடைக்காய்களாக்கி பலியிட இந்தியா முனைகின்றது. எவ்வாறு தமிழ் அமைப்புக்கள் அன்று இந்தியாவுடன் இணைந்து நின்று தமிழ் மக்களை தமிழீழம் என்று ஏமாற்றினார்களோ, அவ்வாறே இன்று புலம்பெயர் புலிக்கழுதைகள் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றன.

ஆனால், இவர்களால் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்களில் இனியும் மண்ணைத்தூவ முடியுமா? என்பதுதான் கேள்வி. ஆசியாவிலே அதிகூடிய ஜனநாயக உரிமைகளை தன்குடிமக்களுக்கு வழங்கியிருந்த இலங்கை அதன் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொண்டிருக்கவில்லை. இதன்பொருட்டு இலங்கை இராணுவத்திடம் 1980 களில் இராணுவபுலனாய்வுப் பிரிவு என்ற ஒன்று இருந்திருக்கவும் இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்தியா அதன் சித்து விளையாட்டுக்களை இலங்கையினுள் காட்டியது. இறைமையுள்ள நாடு ஒன்றின் அரசாங்கங்களுக்கு எதிராக, அந்நாட்டின் குடிமக்களை ஆயுதப் போரட்டத்திற்கு தூண்டி , அவர்களுக்கு ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கியது முதல் இந்தியா மேற்கொண்ட அராஜகங்கள் பல உண்டு. அது இரண்டு மொழிகள் பேசுகின்ற மக்கள் வாழுகின்ற இலங்கை நாட்டவர்களை பிரிவினையின் பெயரால் நிரந்தர எதிரிகளாக ஆக்கிவைத்துள்ளது.

ஆனால் 100 மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவிலே இந்தியனாக பிறந்தோம் இந்தியனாக மடிவோம் என்ற வாக்கியத்தினூடாக பிரிவினை என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாதவர்களாக தன்குடிமக்களை வைத்துள்ளது.

ஆனால் இந்தியா தனது அயல்நாடான சிறியதோர் தீவிலே, தான் தனது நாட்டை ஆழுகின்ற முறைக்கு முற்றிலும் எதிரானதோர் நிலையை விரும்புகின்றது. அவ்வாறாயின் இந்தியா முதலில் 7 கோடி தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ் நாட்டினை பிரித்துக்கொடுக்க வேண்டும். அதற்கு இந்திய மத்திய அரசும் தயாரக இல்லை: அவ்வாறு பிரித்துக்கொடுத்தாலும் பிரிந்து செல்வதற்கு தமிழ் நாட்டு தமிழ் மக்களும் தயாராக இல்லை.

இந்த உண்மையை இலங்கைத் தமிழர்களாகிய நாம் சரியாக புரிந்து கொள்ளாதபோது, இந்தியாவினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை தவிர்க்க முடியாது.

பிராந்தியத்திலே சீனாவுக்கு நிகராக நிற்பதற்கு இந்தியா பல சவால்களை எதிர்கொள்கின்றது. அது பிராந்தியத்திலே தனது வலிமையை வைத்துக்கொள்வதற்கு இலங்கையை தனது காலனித்துவ நாடாக வைத்துக்கொள்ள முனைகின்றது. ஆனால் ஆட்சியாளர்ர்களிடம் நோக்கம் நிறைவேறாதபோது, சிறுபாண்மையினரான தமிழரை அரசாங்கத்திற்கு எதிராக ஏவிவிடுவதும்: ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் ஒத்துப்போகின்றபோது தங்களை நம்பிச் சென்ற தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதும் இந்தியாவிடம் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள். எனவே தொடர்ந்தும் இந்தியாவினை நம்பி கிடைக்கப்பெற்றுள்ள நிம்மதியை இழப்பதற்கு வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் தயாராக இல்லை என்ற உண்மையையும் இந்தியா நாடிபிடித்து அறிந்து வைத்துள்ளது.

இந்நிலையிலேயே, இந்தியா புலம்பெயர் தேசத்திலே கழுதைதேய்ந்து கட்டெறும்பான நிலையில் நிற்க்கும் புலிப்பினாமிகளை கொண்டு சாதிக்க முயல்வது தெரிகின்றது. இதற்கு இலங்கையிலுள்ள மக்களிடம் எந்த ஒத்துழைப்பும் கிடையாதபோது, எவரும் எதிர்பாராக சில்லறைத்தனமான அர்ப்ப கொலைகளை நிறைவேற்ற முனைகின்றனர். ஆனால் இக்கொலைகள் தமிழ் மக்களுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை என்பதை யாவரும் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இந்தியாவினால் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றவர்கள், இலங்கை இந்தியாவுடன் இராஜதந்திரரீதியில் ஒத்துப்போகின்ற காலத்தில் காட்டிக்கொடுக்கப்படுவர் என்பதனை புரிந்த கொள்ள வேண்டும்.

மறுபுறத்தில், அதிபயங்கர பயங்கரவாத அமைப்பொன்றை நேருக்கு நேர் தொடர்சியாக 30 வருடங்கள் நேர்கொண்டதோர் இராணுவம் என்ற வகையில் உலகிலேயே அதிக அனுபவம் கொண்ட புலனாய்வு அமைப்பாக இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு காணப்படுகின்றது. இன்று இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு புலிகளினது, இலங்கைக்கு எதிரான பிற சக்திகளினதும் சகல அசைவுகளையும் தனது அனுபவத்தினூடாக நன்று அறிந்து வைத்துள்ளது. இலங்கை புலனாய்வு பிரிவின் திறன் மற்றும் அதன் அனுபவங்களை உலகிலுள்ள புலனாய்வு அமைப்புக்கள் நேரடியாக சென்று அவர்களிடம் கற்றுச் செல்கின்றது.

மேலும் உலகிலுள்ள அதி சிறந்த இராணுவக் கல்லூரிகளும் புலனாய்வு அமைப்புக்களும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு மேலதிக பயிற்சிக்காக புலமைப்பரிசில்களை வழங்கி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். பயிற்சிக்காக செல்வோர் அங்கே விரிவுரையாளர்களாக செயல்படுகின்றனர். அந்தளவுக்கு இலங்கை புலனாய்வுத்துறை வளர்சியடைந்துள்ளது.

இந்நிலையில் கழுதை தேயந்து கட்டெறும்பான நிலையில் நிற்கும் புலிவால்களின் முயற்சிகள் நிறைவேறுமா? என்பதனையும் அது வடகிழக்கில் வாழும் மக்களுக்கு தரக்கூடிய விளைவுகளையும் மக்கள் புரிந்து கொள்ளாவிடின் இந்தியாவின் சதிவலைகளில் சிக்குவது தவிர்க முடியாததாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com