அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடுக-தேர்தல்கள் ஆணையாளர்
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அதிகாரிகளின் தங்கள் சொத்துக்களின் விபரங்களை எதிர்வரும் ஜீன் மாதம் 30 ம் திகதிக்கு முன்பு தேர்தல் திணைகளத்திற்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தேர்தல் சட்டமூலத்திற்கு அமைவாக அரசியல் கட்சிகளின் அதிகாரிகள் தமது சொத்து, பொறுப்பு விபரங்களை வெளியிடவேண்டுதென குறிப்பிட்ட ஆணையாளர் தேர்தல்களில் போட்டியிட்ட வேளைகளில் குறித்த விபரங்களை வழங்கிய அதிகாரிகளுக்கு இந்த அறிவித்தல் செல்லுபடியாகாது என குறிப்பிட்டுள்ளார்
0 comments :
Post a Comment