அரசாங்கம் வகுப்பு வாதத்துடன் செயற் படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் இந்த குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்.
பெரும்பாலானவர்களை கவனத்தில் கொள்ளாது குறிப்பிட்ட ஒரு சிலரை மாத்திரம் கருத்தில் கொண்டு அரசாங்கம் செயற்படுவதாகவும், அரசாங்கம் செயற்படுத்தியுள்ள கொள்கைகளின் அடிப்படையில் இந்த விடயம் புலப்படுவதாகவும் கபீர் ஹசீம் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment