அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை மேற் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக, ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸூக்கு மாத்திரமே இவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பிரகாரம் மே 18 ஆம் திகதி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸூக்கும் ஹிலரி கிளின்டனுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை, இடம்பெறுமெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவான ஊடகங்கள் இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment