காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்' என இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான குறச்சாட்டுகள் வரும் நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை தருவதற்காக ஐ நாடுகள் சபைப் பொதுச் செயலரால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார். அவர் குற்றச்சாட்டுக்குள்ளான நாட்டிற்குச் சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா எனக் க்கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தால், தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா., சார்பில் சம்பந்தப்பட்ட நாடு கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்படும்.
அந்த முறையில், காஷ்மீரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் தம் விசாரணை பற்றிக் கூறினார்.காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரைச் சுட்டுக் கொல்ல ராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் இதற்காக அமலில் உள்ளது.
இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. அந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். நான் காஷ்மீரில் விசாரணை நடத்தியபோது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.. இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேசச் சட்ட விதிகளுக்கு முரணானது.அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும் வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இது கவலை தரும் விஷயம் என்று ஹெய்னஸ் கூறியுள்ளார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முதலமைச்சர் உட்படப் பலரும் கோரி வரும் நிலையில் ஐ.நா.சபை இவ்வாறு கூறியுள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது..
No comments:
Post a Comment