Thursday, April 12, 2012

87 கொக்கேய்ன் மாத்திரைகள் வைத்திருந்த தாய்லாந்து பெண்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தாய்லாந்தை சேர்ந்த இரண்டு பெண்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றுள் 87 வில்லைகள் கைதான பெண்களின் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளதாகவும், மேலும் 17 போதைப்பொருள் வில்லைகள் கைதான பெண் ஒருவரின் பயணப் பொதியினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாய்லாந்து பெண்கள் இருவரும் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளதுடன் , அவர்களில் ஒருவர் விமானத்தினுள் சுகயீனமுற்றள்ளதால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அந்த பெண்ணின் வயிற்றினுள் போதைப்பொருள் வில்லைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிவந்துள்ளது.

ஒருபெண்ணின் வயிற்றினுள் இருந்து கொக்கேய்ன் 51 போதைப்பொருள் வில்லைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றைய பெண்ணின் வயிற்றினுள் 36 வில்லைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் இப்பெண்களில் ஒருவர் விமானத்திற்குள் மயங்கிவிழுந்தார். அவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சோதிக்கப்பட்டபோது அவரின் உடலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அப்பெண்கள் கொண்டுவந்த பைகளில் இருந்த கொகேயின் போதைப்பொருள் அடங்கிய 17 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 28 வயதான தாய்லாந்து பெண், வைத்தியசாலையில் பொலிஸ் கண்காணிப்பில் உள்ளார். 22 வயதான மற்றொரு பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com