ஒபாமா , புஸ்ஸின் தலைக்கு 200 கோடி விலைபேசுகிறார் பிரித்தானிய நபர்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால், ரூ.200 கோடி பரிசு வழங்கப்படும் என இங்கிலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சமீபத்தில் ஹபீஸ் சயீத் தலைக்கு ரூ.200 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் கோடீஸ்வரரான அகமது(53) என்பவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி அதிபர் ஜார்ஜ் புஷ், ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.200 கோடி பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கருத்துதெரிவிக்கையில் அகமதுவின் செயல் கண்டனத்துக்குரியது. அத்துடன் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment