அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் ஒகியோஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நர்சிங் பட்டப்படிப்பு கல்லூரி உள்ளது. நேற்று காலை மர்ம நபர் ஒருவன் திடீரென அங்கு துப் பாக்கியுடன் புகுந்தான். பின்னர் வகுப்பறைக்குள் நுழைந்த அவன் துப்பாக்கியை காட்டி மிரட்டி அனைவரையும் சுவர் ஓரத்தில் வரிசையாக நிற்கும் படி உத்தரவிட்டான்.
இதனால் பயந்த மாணவ- மாணவிகள் கைகளை தூக்கியபடி நின்றனர். அதை தொடர்ந்து அவன் வெறிபிடித்தவன் போன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதில் 5 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர் களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து காயம் அடைந்த 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
காயம் அடைந்தவர்களில் டாவிந்தர் கவுர் (19) என்ப வரும் ஒருவர். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். இதற்கிடையே மாணவர்களை சுட்டு கொன்றுவிட்டு தப்பி ஓடிய நபர் போலீசில் சரண் அடைந்தான். அவனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் ஒன்கோக் (43) என தெரிய வந்தது. கொரியாவைச் சேர்ந்த இவன் அமெரிக்க குடி யுரிமை பெற்றவன். இவன் இக்கல்லூரியில் படித்த பழைய மாணவன் ஆவான். இவன் எதற்காக மாணவர்களை சுட்டுக் கொன்றான் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment