மாவட்ட முகாமையாளுக்கு தலா 61 லட்சம் பெறுமதியான வாகனங்கள் கையளிப்பு.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், ஜனசெவன 10 லட்சம் வீடுகளை நாடு பூராகவும் அமுல்ப்படுத்தும் வேலைத்திட்டங்களின் கீழ், 10 மாவட்டங்களில் உள்ள வீடமைப்பு அலுவலகங்களுக்கு, டபள் கெப் வாகனங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாகனங்களை கையளிக்கும் வைபவத்தில், அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதம அதிதியாகக் கலந்து கொணடார். தலா 61 லட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த இவ்வாகனங் களுக்கு, திறைசேரி 610 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பத்தரமுல்லையில் உள்ள கட்டுமாண பயிற்சி அலுவலகத்தில் வைத்து 10 மாவட்ட முகாமையாளர்களிடம் இவ்வாகனங்கள் கையளிக்கப்பட்டன
யாழ். மாவட்ட முகாமையாளர் ஜெயசந்திரன் உட்பட, முல்லைத்தீவு, அம்பாறை, அநுராதபுரம், மொனராகலை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் முகாமையாளர்களுக்கு இவ்வாகனங்கள் வழங்கப்பட்டன.
இதன்மூலம் சகல மாவட்டங்களிலும், ஜனசெவன வீடமைப்பு திட்டங்களை அமுல்ப்படுத்துவதற்கு, மாவட்ட முகாமையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென, அமைச்சர் தெரிவித்தார். இரண்டாம் கட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களின் வீடமைப்பு அபிவிருத்தி அலுவலகங்களுக்கு, வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்படுமென்றும், அமைச்சர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment