Wednesday, April 25, 2012

வட பகுதி ரயில் பாதை அமைப்பிற்கு 565 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு

வடபகுதியின் ரயில் பாதை அமைப்பிற்கு 565.69 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இர்கோன் சர்வதேச நிறுவனமானது இந்திய அரசின் நிதி உதவியுடன் வடக்கில் ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பான தென்மாகாணத்திலும் இந்நிறுவனமே ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. வடமாகாணத்தில் மதவாச்சி முதல் மன்னார் வரையிலும் காங்கேசன் துறை முதல் ஒமந்தை வரையான பாதை அமைப்பிலும் இந்நிறுவனமே ஈடுபட்டு வருகின்றது. மதவாச்சி மடுவரையான ரயில் பாதை அமைப்பிற்கு 81.3 அமெரிக்க டொலர்களும் மடு முதல் தலைமன்னார் வரையான பாதை அமைப்பிற்கு 149.74 அமெரிக்க டொலரும் ஒமந்தை முதல் காங்கேசன் துறை வரையான ரயில் பாதை அமைப்பிற்கு 334.37 அமெரிக்க டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment