வடமாகாணத்தில் அடுத்து வரும் சில மாதங்களில் 450 மாணவ தாதியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளவென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.தாதியர் கல்லூரிக்கு 350 பேரும் வவுனியா தாதியர் கல்லூரிக்கு 100 பேருமே இவ்வாறு நியமிக்கப்படவுள்ளனர். கடந்த வருடம் இவர்களுக்கான நேர்முகத்தேர்வு மற்றும் பயிற்சிகள் எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டன என அவர் மேலும் குறிப்பிட்டார்.இது இவ்வாறிருக்கும் போது வடக்கில் இன்னமும் தாதியர் பற்றாக்குறையாகவே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment