இலங்கைக்கு எதிரான துர்ப்பிரசாரங்களை மேற்கொண்டு இல ங்கையில் மனித உரிமை மீறல்களும், யுத்தக் குற்றச் செய ல்களும் இடம்பெற்றன என்று போலியான தொலைக்காட்சி படங்களை ஜோடித்து சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்த லண்டனில் இருந்து இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு தகுந்த தண்டனை கிடை த்திருக்கிறது.
புலிகளுடன் தொடர்பு வைத்து புலிகளின் பணப்பலத்திற்கு அடிபணிந்து, இலங்கைக்கு எதிரான போலி யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்த சனல் 4 தொலைக் காட்சி சேவையின் ஊடகவியலாளர்கள் பஹ்ரைனில் ஒரு நிகழ் ச்சி பற்றி செய்தி திரட்ட சென்றிருந்த போது அந்நாட்டு அர சாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற் றப்பட்டுள்ளார்கள்.
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் வெளிவிவகார நிகழ்வுக ளுக்கு பொறுப்பான நிருபர் ஜொனதன் மிலரும் அடங்கியுள் ளார்.
சனல் 4 குழுவில் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரும் உள் ளடங்கியிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. முதலில் இவர்களை கைது செய்த பஹ்ரைன் அதிகாரிகள் 6 மணித்தியாலங்களுக்கு இவர்களை தடுத்து வைத்த பின்னர், நாட்டை விட்டு வெளி யேற்றியுள்ளார்கள். பஹ்ரைன் அதிகாரிகள் போமிலா 1 கார் ஓட்டப்போட்டி பற்றிய செய்திகளை திரட்டுவதற்கான நிருபர்க ளுக்கு அனுமதி அளித்த போதிலும், அரசியல் சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு அனுமதியளிக்கவில்லை என்ற காரணத்தினா லேயே கைது செய்து பஹ்ரைனில் இருந்து வெளியேற்றப்பட் டுள்ளார்கள்.
சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கைக்கு எதிரான செயற்பாடுக ளுக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியொருவர் பின்னணியில் இருக்கிறாரென்ற உண்மைத் தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கள் மகாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதர வாக வாக்களிக்க வேண்டுமென்று சனல் 4 தொலைக்காட்சி நிறு வனத்தினர் பல்வேறு நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டு வரும் அளவுக்கு இலங்கைக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய ஒரு இலங்கைத் தமிழ் பெண், சனல் 4 தொலைக்காட்சி சேவையின் நிர்வாகப் பணிப் பாளரை மணம் புரிந்து லண்டனில் வசித்து வருகின்றார் என்ற தகவல் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான மகாநாடு நடந்து கொண் டிருந்த காலகட்டத்தில் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெண்மணி சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், புலிகள் அமைப்புகளுடனும் சேர்ந்து செயற் பட்டு வருவது இந்தச் செய்தி மூலம் அம்பலத்திற்கு வந்துள் ளது.
சனல் 4 இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிடு வதற்கு இந்தப் பின்னணியே காரணமாக இருக்கிறதென்பது இராஜதந்திர மட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கைக்கு தீங்கிழைக்கக்கூ டிய வகையில் வெளியிட்டிருக்கும் புதிய தொலைக்காட்சி விவ ரண நிகழ்ச்சியொன்று ஜெனீவா மகாநாடு நடைபெற்றுக் கொண் டிருந்த காலகட்டத்தில் இணையத்தளம் மூலம் வெளியாகிருந் தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த நிறுவனம் அவற்றின் இறுவெட்டு பிரதிகளை ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அன்பளிப்பு செய்தது.
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுக்கென சில ஒழுக்க நெறி களை கடைப்பிடிப்பது அவசியம். உண்மையான செய்திகளை அப்பட்டமாக வெளியிடுவதில் எவ்வித தவறுமில்லை.
ஆயி னும் சில உண்மைத் தகவல்களை உடனடியாக வெளியிடுவதன் மூலம் நாட்டில் அநாவசியமான கலவரங்கள், இனக்கலவரங்கள், மதக்கலவரங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அந்த செய்தி களை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்புவதை தவிர்த் துக் கொள்வதே இயற்கை நீதியாகும்.
இவற்றை விட ஒருபடி கடந்து சனல் 4 தொலைக்காட்சி சேவை யைப் போன்று உண்மைக்கு புறம்பான போலியான தகவல் களை ஜோடித்து வெளியிடுவது மன்னிக்க முடியாத குற்றமா கும். எனவே, சனல் 4 போன்ற தொலைக்காட்சி சேவைகள் மட் டுமல்ல நம்நாட்டில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களும் சமூகப் பொறுப்புடன் செய்திகளை வெளியிடும் பணியை நடு நிலையாக சமூகங்களுக்கு தீங்கிழைக்காத வகையில் நிறைவேற் றுவது மிகவும் அவசியமாகும்.
No comments:
Post a Comment