2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 62 ஆவது ஆண்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கியின் அறிக்கையே இன்று காலை வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியிடம் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் 2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கியின் அறிக்கையை கையளித்தார்.
இந் நிகழ்வில் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ.மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையில்,
இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் நிதி அமைச்சர் என்ற வகையிலும் நான் ஆறு தடவைகள் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
உலக நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் இலங்க 8.3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த பொருளாதர வளர்ச்சியன் அநுகூலங்கள் நாட்டின் சாதாரண பிரஜைகளையும் சென்றடைவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
30 வருட கொடூர யூத்தத்துக்கு பின்னணியில் செயற்பட்ட சக்திகள் இன்று சர்வதேச ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை நாட்டு மக்கள் மறந்து விடக்கூடாது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஒரே இரவில் ஏற்படுத்திவிட முடியாது.
எமது நாட்டின் பிரச்சினைக்கு வெளிநாடுகளில் இருந்து தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. தீர்வூத் திட்டம் எமது நாட்டுக்குள்ளேயே உருவாகவேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment