Monday, April 23, 2012

மே18! தமிழர்களின் துக்கதினம் என்றுகனடாவில் சுவரொட்டிகள்!கோண்டாவில் கோதண்டராமன்.

கனடாவில் மே 18 யாருக்குத் துக்கதினம்? கனடாவில் அன்றைய தினம் தமிழருக்கு எதுவும் பாதிப்புக்கள் நடந்ததாக தெரியவில்லை. அப்படியாயின் இந்த 'துக்கதினம்' 'போர் குற்ற நாள்' என்றெல்லாம் புலம்பும் ஆட்கள் யார்?
 
இலங்கையிலுள்ள தமிழர்களைப் பொறுத்தளவில் மே 18 ஒரு சந்தோஷ தினம். அசுரர்கள் முற்றாக அழிக்கப்பட்ட தினம். பிள்ளை பிடிகாரர், ஆள் கடத்திகள், வெள்ளை வான் கடத்தல்காரர்கள், கப்பம் வாங்கியோர் என்ற புலிகளின் நாசகாரக் கும்பல்களின் கொட்டம் அடக்கப்பட்ட தினம்.
 
கனடாவில் இந்த மே 18 யாரை பாதித்தது என்று பார்த்த பொழுது கனடாவில் இருக்கும் 'உண்டியல்' புலிகளையே இந்த தினம் பாதித்துள்ளது. இறுதி யுத்தம், மாவீரர் தினம் என்றெல்லாம் தமிழர்களிடம் சில்லறை சேர்த்தவர்கள் காசு சுருட்ட காரணம் எதனையும் சொல்ல முடியாமல் தத்தளிக்க வைத்த தினம்தான் இந்த மே18.
 
வேலையும், கூலியுமில்லாமல் வீடுகள், கார்கள், "ஹவானா உல்லாசம்" என்று உல்லாசம் கண்டவர்களுக்கு  செருப்படி கொடுக்கப்பட்ட தினத்தை 'தமிழர்களின்' துக்க தினம் என்று எதற்காக சொல்லுகிறார்கள் என்பது வேடிக்கையான விஷயம். இனிமேல் பணம் கிடைக்காது என்றால் யாருக்குத்தான் 'துக்கம்' வராது? உண்டியல் கலெக்ஷன் இனி நடக்காது என்றவுடன் கையில் கிடைத்தவற்றைச் சுருட்டிக் கொண்ட பலர் இப்பொழுது 'கட்சி' மாறியும் உள்ளனர். நேரு குணரத்தினம் போன்றவர்கள் புலிகளுக்கும் தங்களுக்கும் 'சம்பந்தமில்லை' என்றெல்லாம் மானம் கெட்டு பகிரங்கமாக அலறியுள்ளனர். புலிகளைத் தடை செய்த தற்போதைய ஆளும் கன்சவேட்டிவ் கட்சிக்கே பலர் தாவியுள்ளனர். இந்தக் கட்சி தமிழர்களின் 'கள்ளத் தோணிகளை' தேர்தல் காலத்தில் விளம்பரமாக உபயோகித்தனர்.  கன்சவேட்டிவ் கட்சி இப்பொழுது ஆளும் கட்சி. 
 
முன்னர் புலி, பிரபாகரன் என்று கூவி பகிரங்கமாகப் புலிப் பயங்கரவாதிகளை ஆதரித்த கும்பல்கள் 'மனித உரிமை' என்று அலற ஆரம்பித்துள்ளனர். மனித உரிமை பற்றி புலிக்கு வக்காலத்து வாங்கிய கும்பலக்ளுக்குக் கதைக்க என்ன உரிமை இருக்கிறது? கனடிய அரசு புலிகளை ஆதரிப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று ஏதாவது சூசகமாகத் தெரிவித்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். பல தமிழ் கிரிமினல்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
 
புலிகள் தொலைந்த பின்னர் நாடு கடந்த ஈழம் என்று தொடங்கி அதுவே 'சில்லறை' பிரச்சனைகளால் நெடியவன், உருத்திர குமாரன், விநாயகம், திருச்செல்வம் என்று கோஷ்டிகளாகப் பிரிந்துள்ளது. மே 18  அன்று இரு கும்பல்கள் கூட்டங்கள் வைப்பதாக அறிவித்துள்ளன.
 
உருத்திரகுமாரன் கும்பல் ஒரு டாலராவது தாருங்கள் என்று பகிரங்கமாகவே அழுகிறார்கள். திருச்செல்வம் (இவரும் ஒரு கடல் கடந்த பிரதமர்) தலைமையிலான கோஷ்டி பல உண்டியல்காரர்களை இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் புலி என்று வாரிய பெருமளவு பணமும் சொத்துக்களும் இந்தக் கும்பலிடம் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
ஆயினும் புலிகள் தொடர்ந்தும் இலங்கையில் அட்டகாசம் செய்வார்கள் என்றும் அதனால் தாங்கள் மூன்று தலை முறைக்கும் தாராளமாக சொத்து சேர்த்து 'ஹாயாக' வாழலாம் என்ற கனவில் இராஜபக்ஷ  மண்ணள்ளிப் போட்டதினால் அரண்டுபோன இந்தக் கும்பல்கள் இராஜபக்ஷவுக்கு வெள்ளையர்களைக் கொண்டு 'நாலு சாத்து' சாத்த வேண்டும் என்று அலைகிறார்கள். அதுவும் நடந்த பாடாக இல்லை என்பதினால் புதுப் புது பொய்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்தக் கோஷ்டிகள் அனைத்தும் இலங்கையுடன் சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டவர்கள் என்பது ருசிகரமான தகவல். உறவினர்களுக்குக் கடிதம் எழுதுவார்களா என்பதே சந்தேகம். இந்த உண்டியல் கும்பல்கள் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள் சகலரையும் இலங்கையிலிருந்து 'இழுத்து' பல வருடங்களாகி விட்டன. இப்பொழுது புலியை நம்பி 'மோட்கேஜ்' எடுத்தவர்கள் அல்லல் படுகிறார்கள். இலங்கை அகதிகளுக்கு உதவி செய்யவேண்டும நிதி கேட்கிறார்கள். ஆனால் பலரும் 'முழங்கையைக்' காட்டுவதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்.
 
கனடாவில் 'தமிழ் மாணவர்' என்ற பெயரில் முன்னர் தலை வழுக்கை விழுந்த நேரு குணரத்தினம் தோன்றுவது வழக்கம். இப்பொழுது இரண்டாம் தலை  முறை கேடிகள் உருவாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் எதோ வகையில் 'உண்டியல்' கும்பல்களோடு தொடர்பு உடையவர்களே ஆவர்.
 
இலங்கை சென்ற இந்திய பாராளுமன்றக் குழு இலங்கைக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியதனால் கடுப்புக்குள்ளாகி 'சுஷ்மா' நல்ல சாப்பிட்டபடியால்  பொய் சொல்லுகிறார் என்று தங்கள் வானொலியிலும் பேப்பர்களிலும் அழுது பிலாக்கணம் வைக்கிறார்கள். அதிலும்  கனடாவிலுள்ள  தமிழ்  'ஊடகம்கள்' 

டக்ளசை எம்ஜிஆர் என்று நாச்சிமுத்து புகழ்ந்ததை இருட்டடிப்புச் செய்துள்ளனர்.
அதிலிருந்து ஒரே ஒரு விஷயம் தெளிவாகிறது. இந்தக் கும்பல்களுக்கும் இலங்கைக்கும் தொடர்புகள் அறுந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை.
 

No comments:

Post a Comment