இணுவில் பகுதியில்16 வயதுடைய மாணவியின் சடலம் மீட்பு
யாழ். இணுவில் பகுதியிலுள்ள வீடென்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப் பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். இணுவில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தர்மலிங்கம் தமயந்தி என்ற 16 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த சுன்னாகப் பொலிஸார் மருத்துவப் பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்
0 comments :
Post a Comment