ஓரிரு தினங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 158 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இலங்கை ரூபாவின் பெறுமதி மதிப்பிறக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட வேண்டிய கட்டாய நிலை மற்றும் ஈரானில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை போன்ற காரணங்களினால் இந்த விலை அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உள்ளதாக தெரியவருகிறது.
பெற்றோலைத் தொடர்ந்து ஒரு லீற்றர் டீசலின் விலையும் 5 ரூபா முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment