Wednesday, April 4, 2012

வண்டி வாங்கிக்கொடுக்காததால் தற்கொலை செய்ய முயற்சித்தவருக்கு 15,000 ரூபா அபராதம்.

யாழில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கு நீதிமன்றம் 15,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, புதிய துவிச்சக்கரவண்டி ஒன்றை வாங்கிக்கொடுக்க பெற்றோர் மறுத்ததனாலேயே குறித்த மாணவன் அலரிவிதையை உண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அலரி விதையை உடகொண்ட பின்னர் குறித்த மாணவன் நண்பர்களுடன் விளையாட சென்றசமயம் மயக்கம் அடைந்து வீதியில் விழுந்துள்ளார். இதனை அவதானித்த வீதியால் சென்றவர்கள் மாணவனை உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றில் 15,000 ரூபா பணத்தை குற்றப் பணமாக செலுத்தியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com