Sunday, April 15, 2012

மும்பை தாக்குதலுக்கு உதவிய பாகிஸ்தான் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் திததி மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிய பாகிஸ்தான் நபர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் திததி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்காவில் இருந்தபடியே தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காகவும், தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தல், போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த ஜுபைர் அகமது (24). ஏன்ற நபருக்கே அமெரிக்க நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட, அமெரிக்க புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்ட வாலிபர் தீவிரவாத இயக்கத்தில் இளைஞர்களை சேர்க்க பிரசாரமும் செய்தமையும், லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் மகன் தவ்ஹா சயீத்துடன் தொடர்பு வைத்திருந்தமையும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜுபைர் அகமது கைது செய்யப்பட்டு வர்ஷீனியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட ஜுபைர் அகமதுவுக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment