பாகிஸ்தானில் விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 127 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து போஜா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பிஎச்ஓ-213 என்ற விமானம் இஸ்லாமாபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது.
மாலை 5 மணிக்கு புறப்பட்ட விமானம் இஸ்லாமாபாத் பெனசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே வந்த போது, விமான நிலையத்திற்கு அருகேயுள்ள ஹூசைன்பாத் என்ற இடத்தில் குடியிருப்புக்குள் விழுந்து நொறுங்கியது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
போஜா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது முதல் சேவையை கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி செயல்படுத்திய போது விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த விமான விபத்தில் 152 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.
No comments:
Post a Comment