வடகொரியா 12 - 16ம் திகதிக்குள் உன்ஹா 3 எனும் ரொக்கட்டை விண்ணுக்கு ஏவலாம்.
வடகொரிய முன்னாள் தலைவர் கிம் இல் சங்கின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12 தொடக்கம் 16ம் திகதிக்குள் உன்ஹா 3 எனும் ரொக்கட்டை விண்ணுக்கு ஏவவுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது
இந் ரொக்கட்டை ஏவுவதன் காரணமாக ஏற்படக் கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக ஆசிய பிராந்தியத்தின் பிலிப்பைன்ஸ் விமான சேவை, ஜப்பானின் பிரதான விமான சேவை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விமான சேவைகள் தமது விமான பயணங்களை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பிற்கும் மத்தியில் உன்ஹா 3 எனும் ரொக்கட் பரீட்சார்த்த நடவடிக்கையை மேற்கொள்வதில் உறுதியாக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment